அடிக்கடி எழும் கேள்விகள்

Shopbook என்றால் என்ன?

Shopbook என்பது சிறு வணிக உரிமையாளர்கள் தங்கள் நிதிகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் தொலைபேசி செயலியாகும். Shopbook மூலம், உங்கள் விற்பனை, செலவுகள், பணப்புழக்கம், சரக்குகள் உள்ளிட்டவற்றை எளிதாகக் கண்காணிக்கலாம் என்பதோடு, சிறந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவ விரிவான அறிக்கைகளையும் உருவாக்கலாம்.

Shopbook 100% இலவசமானதா?

Shopbook ஒரு உயர் வகை அமைப்பை வழங்குகிறது. இங்கு வாடிக்கையாளர், விநியோகத்தர் மற்றும் நிதி பராமரிப்பு தொகுதிகள் போன்ற அடிப்படை அம்சங்கள் காலவரையின்றி இலவசமாகக் வழங்கப்படும். இருப்பினும், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மேலதிக செயற்பாடுகளுக்கு, எதிர்காலத்தில் சந்தா அறவிடப்படும். நாம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால், இதனை செயற்படுத்தவும், மேம்படுத்தவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவதால், Shopbook இன் அனைத்து அம்சங்களும் செயற்பாடுகளும் 2023 செப்டெமபர் வரை எவ்வித கட்டணமும் இன்றி பயனர்களால் அனுபவிக்க முடியும்.

Shopbook ஐ இணைய வசதியின்றி பயன்படுத்த முடியுமா?

எமது குழு தற்போது இந்த அம்சத்தை உருவாக்கி செயற்படுத்தி வருகிறது, இது மிக விரைவில் கிடைக்கும்.

Shopbook இனால் ஒன்றுக்கு மேற்பட்ட வணிகங்களைக் கண்காணிக்க முடியுமா?

ஆம், பல வணிகங்களைக் கண்காணிக்க Shopbook செயலியை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வணிகத்திற்கும் தனித்தனி கணக்கை உருவாக்க வேண்டும். தேவைக்கமைய அவற்றுக்கிடையே எளிதாக மாறலாம்.

Shopbook இனை அனைத்து வகையான வணிகங்களுக்கும் பயன்படுத்தலாமா?

ஆம், சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் சேவைகள் அடிப்படையிலான வணிகங்கள் வரை அனைத்து வகையான வணிகங்களிலும் செயற்படும் வகையில் Shopbook வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வானது மற்றும் உங்கள் நிதிகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும்.

அறிக்கைகளை பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஆம், Shopbook இலிருந்து PDF வடிவத்தில் அறிக்கைகளைப் பதிவிறக்கலாம். PDF வடிவத்தில் அறிக்கையைப் பதிவிறக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

படி 01: உங்கள் சாதனத்தில் Shopbook செயலியைத் திறக்கவும்

படி 02: பயன்பாட்டு பலகையில் அறிக்கையை உருவாக்க விரும்பும் தொகுதியைத் தெரிவு செய்யவும்

படி 03: இங்கு ‘அறிக்கையை காண்பி’ என்பதை அழுத்தவும்

படி 04: அறிக்கையை உருவாக்க விரும்பும் காலப்பகுதியை தெரிவு செய்யவும்

படி 05: திரையின் அடிப்பகுதியில் உள்ள ‘அறிக்கையைப் பதிவிறக்கவும்’ என்பதை அழுத்தவும்

படி 06: அறிக்கை உங்கள் சாதனத்தில் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் சாதனத்தின் சேமிப்பகத்தில் சேமிக்கப்படும்

Shopbook என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது?

விற்பனை பொருட்களின் கண்காணிப்பு, வாடிக்கையாளர் தினசரி புத்தகம், விநியோகத்தர் தினசரி புத்தகம், பண விபர புத்தகம், விலைப் பட்டியல், அறிக்யைிடல் உள்ளிட்ட உங்கள் நிதிகளை நிர்வகிக்க உதவுகின்ற பல்வேறு அம்சங்களை Shopbook கொண்டுள்ளது. இது பயனர் நட்பு இடைமுகத்தையும் கொண்டுள்ளதால் கையாள எளிதானது.

எனது முந்தைய மாதத் தரவுகள் ஏன் காண்பிக்கப்படவில்லை? எனது தரவுகள் தொலைந்துவிட்டதா?

உங்கள் தரவுகள் தொலையவில்லை. தரவு மேகக் கணனியுடன் சரியாக இணைக்கப்படவில்லை அல்லது ஒத்திசைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். செயலியை மீள ஆரம்பிக்க முயற்சி செய்யவும் அல்லது உங்கள் இணையத்தின் இணைப்பைச் சரிபார்க்கவும். சிக்கல் தொடர்ந்தால், 077 886 1056 எனும் இலக்கம் ஊடாக உதவி கோரலாம்.

OTP குறியீட்டைப் பெறுவதில் ஏன் எனக்கு அடிக்கடி சிக்கல்கள் எழுகின்றது?

OTP குறியீடுகள் SMS மூலம் அனுப்பப்படுகின்றன. நீங்கள் அவற்றைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட பல்வேறு காரணங்கள் காணப்படலாம். இது வலையமைப்பு சிக்கலாக இருக்கலாம் அல்லது உங்கள் தொலைபேசி அமைப்புகளில் உள்ள சிக்கலாக இருக்கலாம். உங்கள் கையடக்கத் தொலைபேசியை மீள ஆரம்பிக்க முயற்சிக்கவும் அல்லது உதவிக்கு உங்கள் தொலைபேசி சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும். சிக்கல் தொடர்ந்தால், 077 886 1056 இலக்கம் ஊடாக உதவிக்கு அழைக்கலாம்.

எனது கையடக்கத் தொலைபேசி தொலைந்துவிட்டால்/ சேதமடைந்தால் எனது தரவுகளை மீண்டும் அணுக முடியுமா?

ஆம். உங்கள் தரவு மேகக் கணனியில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை மீண்டும் அணுகலாம். உங்கள் புதிய சாதனத்தில் Shopbook செயலியைப் பதிவிறக்கி, உங்கள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் தரவுகளை அணுகலாம்.

எனது தரவுகள் பாதுகாப்பாக உள்ளதா?

ஆம், உங்கள் தரவு Shopbook இற்குள் பாதுகாப்பாக உள்ளது. உங்கள் தரவைப் பாதுகாப்பாக பேணி வைத்திருக்க, தொழில்துறை ரீதியான தரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் பயன்படுத்துகிறோம்.

நான் எவ்வாறு Shopbook செயலியை பெறுவது?

Google Play Store அல்லது Apple App Store இலிருந்து Shopbook செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். ‘Shopbook’ என தேடி, செயலியை இலவசமாகப் பதிவிறக்கலாம். நீங்கள் செயலியை நிறுவியவுடன், ஒரு கணக்கை உருவாக்கி உடனடியாக அதைப் பயன்படுத்தத் ஆரம்பிக்கலாம்.